Home கலை உலகம் தூங்காவனம் படத்தில் கமலின் மனைவியாகிறார் ‘பாபநாசம்’ஆஷா சரத்!

தூங்காவனம் படத்தில் கமலின் மனைவியாகிறார் ‘பாபநாசம்’ஆஷா சரத்!

541
0
SHARE
Ad

NTLRG_150709184033000000சென்னை, ஜூலை 10- கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் கண்டிப்புள்ள காவல்துறை ஆணையராகவும், அதேசமயம்,பெற்ற மகனைத் தொலைத்துத் தவிக்கும் பாசமுள்ள தாயாகவும் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டிருப்பவர் ஆஷா சரத்!

மலையாள ‘திருஷ்யம்’ மற்றும் கன்னட ‘திருஷ்யம்’ இரண்டிலும் இவர்தான் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

‘பாபநாசம்’ படத்தில் ஆஷா சரத்தின் சிறந்த நடிப்பாற்றலைப் பார்த்த கமல்ஹாசன், தனது அடுத்த படமான ‘தூங்காவனம்’ படத்தில் ஆஷா சரத்துக்குத் தனது மனைவியாக நடிக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

‘பாபநாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆஷா சரத்துக்குத் தமிழ் படங்களில் நடிக்க நிறைய அழைப்புகள் வருகின்றன.

ஆனால், இப்போதைக்குத் ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்க மட்டுமே அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.