Home Featured தமிழ் நாடு இளங்கோவனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் கிடைத்தது!

இளங்கோவனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் கிடைத்தது!

585
0
SHARE
Ad

Elangovan EVKS Congressசென்னை – தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, காமராஜர் அரங்க பெண் ஊழியர் வளர்மதி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறை, இளங்கோவன் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.