Home கலை உலகம் விஷாலுக்கு முதல் தோல்வி: நாடக நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி வெற்றி!

விஷாலுக்கு முதல் தோல்வி: நாடக நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி வெற்றி!

513
0
SHARE
Ad

vishinsideசென்னை- நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார்அணிக்கும் விஷால் அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவது தெரிந்ததே! இத்தேர்தலில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர் சங்கத்தில் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் விஷால் அணியினரும், சரத்குமார் அணியினரும் மோதினர்.

#TamilSchoolmychoice

தலைவராக அத்தியப்பனும், துணைத்தலைவராக கண்ணனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமார் அணியில் மேயர் சவுண்டப்பனும், விஷால் அணியில் ரகுபதியும் போட்டியிட்டனர்.

இதேபோல் துணைச்செயலாளர் பதவிக்கு முத்துகிருஷ்ணன், ராஜசிகாமணி ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஏ.பி.சக்திவேல் மற்றும் சுந்தரமும் போட்டியிட்டனர்.

இதுதவிர, 10 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு (ஆண்-7, பெண்-3) 18 பேர் போட்டியிட்டனர்.

217 பேர் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத் தேர்தலில், 205 ஓட்டுகள் பதிவாயின. அதில் ஓர் ஓட்டு செல்லாத ஓட்டாகும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சரத்குமார் அணி சார்பில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மேயர் சவுண்டப்பன் 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த போட்டியிட்ட விஷால் அணியைச் சேர்ந்த ரகுபதிக்கு 74 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதேபோல் சரத்குமார்அணியில் இருந்து துணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட முத்துகிருஷ்ணன் 138 வாக்குகளும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ.பி.சக்திவேல் 152 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

தோல்வி அடைந்தாலும் விஷால் அணியினர் துவளாமல், “ இதை எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இது சும்மா உள்ளூர்த் தேர்தல். முக்கியத் தேர்தல் இனிமே தானே இருக்கிறது.

முக்கியமான நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், மீதியுள்ள ஓட்டுகளைப் பெறுவதற்கு மற்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம்” என்று உறுதியோடு சொல்கின்றனர்.