Home Featured நாடு அன்வாரின் குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் – டோனி புவா கருத்து

அன்வாரின் குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் – டோனி புவா கருத்து

794
0
SHARE
Ad

Tony Phuaகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவாரேயானால், கடந்த 1999-ம் ஆண்டு அன்வார் என்ன குற்றம் செய்ததாகக் கூறப்பட்டதோ, அதே குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தெரிவித்துள்ளார்.

“கடந்த 1999-ம் ஆண்டு, தனது ஓரினப்புணர்ச்சி வழக்கை விசாரணை செய்த சிறப்பு அதிகாரிகளுக்கு அன்வார் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.”

“அன்வார் மீது சுமத்தப்பட்ட  அக்குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றே மலேசியர்கள் நம்பினர். ஆனால் தற்போது நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக உள்ளன. ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில் அவர் தொடர்ந்து தவறான அறிக்கைகளை அவர் வெளியிட்டு வருவதே அதற்கு சான்றாகும்” என்றும் டோனி புவா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice