Home Featured தமிழ் நாடு மாட்டு சாணத்தால் இளங்கோவனுக்கு சிலை – கராத்தே வீரர் உசைனி ஆவேசம்!

மாட்டு சாணத்தால் இளங்கோவனுக்கு சிலை – கராத்தே வீரர் உசைனி ஆவேசம்!

708
0
SHARE
Ad

hussaini1சென்னை – முதல்வர் ஜெயலலிதா-பிரதமர் மோடி சந்திப்பை விமர்சித்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கடும் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ள நிலையில், ஜெயலலிதா அனுதாபியான கராத்தே வீரர் உசைனி, மாட்டு சாணத்தில் இளங்கோவனுக்கு சிலை செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து விகடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த அயோக்கியன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, சிற்ப முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக உலகிலேயே முதல் முறையாக மாட்டு சாணத்தால் ஆன சிலையை உருவாக்கி உள்ளேன்.”

“நடிகர் ஒருவர் பெண்ணை விமர்சித்தால் கொந்தளிக்கும் பெண்கள் அமைப்பு, ஏன் இளங்கோவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவில்லை? என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை, இளங்கோவனை கீழ் பாக்க மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மிகக் கடுமையான வார்த்தைகளால் உசைனி, இளங்கோவனை விமர்சித்துள்ளது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உசைனியின் காணொளியைக் கீழே காண்க: