Home Featured நாடு பெர்சே 4.0 பேரணி சட்டத்திற்குப் புறம்பானது – காவல்துறை அறிவிப்பு

பெர்சே 4.0 பேரணி சட்டத்திற்குப் புறம்பானது – காவல்துறை அறிவிப்பு

615
0
SHARE
Ad

Bersih 4கோலாலம்பூர் – இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணி சட்டத்திற்குப் புறம்பானது என காவல்துறை அறிவித்துள்ளது.

காரணம், அதன் ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரிடம் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகர காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ தாஜுடின் முகமட் இசா கூறுகையில், அமைதிப் பேரணி சட்டம் 2012, பிரிவு 9-ன் கீழ் ஏற்பாட்டாளர்கள், பேரணி நடைபெறும் இடம், செல்லும் வழிகள் போன்றவை அடங்கிய முழு அறிக்கை வழங்கியிருக்க வேண்டும்.அப்போது தான் காவல்துறை அவர்களுக்கு உதவியிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரோஹானி அப்துல் கரீம் விடுத்த அறிக்கை ஒன்றில், இந்தப் பேரணியில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். நாடெங்கிலும் பல இடங்களில் நடைபெறவுள்ள இப்பேரணியில் குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.