Home Featured நாடு பெர்சே 4.0 பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் – மரியா சின் திட்டவட்டம்!

பெர்சே 4.0 பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் – மரியா சின் திட்டவட்டம்!

556
0
SHARE
Ad

maria chin abdullahகோலாலம்பூர் –  பெர்சே 4.0 பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என பெர்சே 2.0 ன் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார். பெர்சே 4.0 பேரணி சட்டத்திற்குப் புறம்பானது என காவல்துறை அறிவித்திருந்த நிலையில் தான், மரியாவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெர்சே பதிவு செய்யப்பட்ட இயக்கமல்ல என உள்துறை அமைச்சக பொதுச் செயலர் அறிவித்துள்ள நிலையில், பேரணி அமைப்பாளர்கள் இன்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து, கடந்த 2012-ம் ஆண்டு, உயர் நீதிமன்றம் பெர்சேவை சட்டப்பூர்வமான இயக்கம் என அறிவித்ததை எடுத்துரைப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.