கோலாலம்பூர் – இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணியின் போது, நாட்டில் அவசரகால நிலையை அரசாங்கம் அறிவிக்குமானால், இராணுவம் தலையிடும் என மலேசிய ஆயுதப் படையின் தலைவர் சுல்கிப்ளி முகமட் சின் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தால் மட்டுமே இராணுவம் தலையிடும். சூழ்நிலை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக வகைப்படுத்தப்பட்டால், காவல்துறையின் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொண்டு செயல்படுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.