Home இந்தியா இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 305 நகரங்கள் தேர்வு

இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 305 நகரங்கள் தேர்வு

505
0
SHARE
Ad

shutter_stock_2062589gபுதுடில்லி – இந்தியா முழுவதும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 305 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வீடு திட்டத்தை ஜூன் மாதம் அறிவித்தார். இத்திட்டத்தில் கீழ் நகர்ப்புற ஏழை மக்களுக்கு 2022–ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று அவ்வறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி,முதல் கட்டமாக நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தர 9 மாநிலங்களில் 305 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சத்தீஸ்கார்–36 நகரங்கள்

குஜராத்–30  நகரங்கள்

ஜம்மு காஷ்மீர்–19  நகரங்கள்

ஜார்க்கண்ட்–15  நகரங்கள்

கேரளா–15  நகரங்கள்

மத்திய பிரதேசம்–74  நகரங்கள்

ஒடிசா–42  நகரங்கள்

ராஜஸ்தான்–40  நகரங்கள்

தெலுங்கானா–34  நகரங்கள்

-ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்திட்டதிற்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது.2 கோடி வீடுகளில் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.30 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவை தவிர, அடுத்த கட்டமாக ஆந்திர பிரதேசம், பீகார், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, உத்தரகாண்ட் ஆகிய மேலும் 6 மாநிலங்களில் வீடுகள் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.