Home Featured வணிகம் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் தான் பயணிக்கிறது  – நஜிப் விளக்கம்!

நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் தான் பயணிக்கிறது  – நஜிப் விளக்கம்!

784
0
SHARE
Ad

DATUK SERI NAJIB TUN RAZAKகோலாலம்பூர் – உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலில் இருந்தாலும், மலேசியப் பொருளாதாரம் தற்போதும் சரியான பாதையில் பயணிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கம் அளித்துள்ளார். மலேசியப் பொருளாதாரம் குறித்த 5 காரணிகள், அதன் நிலைத்தன்மையை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைத் தன்மையை உணர்த்தும் 5 காரணிகள் குறித்து நஜிப் கூறியிருப்பதாவது:-

பொருளாதார வளர்ச்சி

#TamilSchoolmychoice

உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருந்தாலும், மலேசியா, கடந்த வருடம் 6 சதவீத வளர்ச்சியைப் பெற்று இருந்தது. இந்த வருடத்தின் இறுதியில், பொருளாதார மந்தநிலையைத் தாண்டி 5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

98-ல் ஆசிய பொருளாதார வீழ்ச்சி:

1998-ம் ஆண்டு, ஆசிய அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் மோசமான நிலையல் (- 7 சதவீதம்) இருந்தது. அதன் மூலம் நாம் கற்ற பாடம் தான் தற்போது நம்மை காத்துள்ளது. உதாரணமாக, கடந்த 2009-ம் ஆண்டு நாட்டின் நிதிப் பற்றாக்குறை – 6.7 சதவீதமாக இருந்தது. தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளும், நிதி அமைப்புகளும் நாளுக்குநாள் வலுவானதாக மாறிவருகின்றன

வறுமை ஒழிப்பு

நாட்டின் வளர்ச்சியை உணர்த்தும் மூன்றாவது காரணி வறுமை ஒழிப்பு தான். 1970-ம் ஆண்டு 49.3 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2014-ல் 0.6 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

2009-2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஜிடிபி 47.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2010-ம் ஆண்டு பொருளாதார மாற்றுத் திட்டங்கள் மூலம் 1.8 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியா மீது உலக நாடுகளின் பார்வை

பல்வேறு பொருளாதார சவால்களை நாம் கடந்துள்ளதால், உலக நாடுகளின் பார்வை எப்போதும் மலேசியாவின் மீது உள்ளது. அனைத்துலக நிறுவனங்களின் ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் இவை தெரியவருகிறது. 2014-ம் ஆண்டிற்கான ‘உலக போட்டித்தன்மை ஆண்டுமலரில்’ (World Competitiveness Yearbook) சுமார் 60 நாடுகளில் மலேசியாவிற்கு 12வது இடம் கிடைத்துள்ளது.

நலத் திட்டங்கள்  நிறைவேற்றம்

நாட்டின் நலனிற்காக, நகர மாற்ற நிலையங்கள் (UTC), ஊரக மாற்ற நிலையங்கள் (RTC) போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், ரிங்கிட் வீழ்ச்சியைப் பற்றி நான் உணராமல் இல்லை. இதனை தடுப்பதற்காக 10 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், நாம் ஒன்றை உணரவேண்டும், தற்போதய வீழ்ச்சி உலக அளவில் ஏற்பட்டுள்ள நிகழ்வாகும். ஏறக்குறைய  பெரும்பாலான நாடுகள் இதனால் பதிக்கப்பட்டுள்ளன.

நான் ஒன்று மட்டும் உறுதியாகக் கூறுகிறேன், இந்த விவகாரத்தில் (ரிங்கிட் வீழ்ச்சி) நாங்கள் கவனத்தை இழக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலை விரைவில் மாறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.