Home இந்தியா இந்துத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட பிரபல கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை!

இந்துத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட பிரபல கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை!

632
0
SHARE
Ad

kal_2529357fஹம்பி – சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல புரட்சிகரக் கன்னட எழுத்தாளரும், கன்னடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது.

தர்வாத்தில் உள்ள கல்பர்கியின் இல்லத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். தெரிந்தவர்கள் யாரோ தான் வந்துள்ளனர் என நினைத்துக் கதவை திறந்த கல்பர்கியை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் கல்பர்கி உயிரிழந்தார்.

இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாகப் பேசியும் எழுதியும் வந்ததால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஏனெனில்,அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாகப் போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தக் கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும், முற்போக்கு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.