Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டும் டைகர் ஏர்வேஸ்

இந்தியாவில் விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டும் டைகர் ஏர்வேஸ்

644
0
SHARE
Ad

indexசென்னை, மார்ச் 11 – ஏர் ஆசியா நிறுவனத்தை தொடர்ந்து மலேசியாவின் டைகர் ஏர்வேஸ் நிறுவனமும், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பங்குதாரர்கள் தேவை என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டைகர் ஏர்வேஸ் விமான நிறுவனம்,  கடந்த 2007 லிருந்து சிங்கப்பூர்-இந்தியா விமான சேவையை நடத்தி வருகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இந்நிறுவனத்தில் அதிகப் பங்குகளைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம், சென்னை, சிங்கப்பூர் சேவையுடன் பெங்களுரு, ஹைதராபாத், கொச்சின், திருவனந்தபுரம்  மற்றும்  திருச்சிக்கு தொடர் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, சென்னை வந்துள்ள அந்நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் காநேஸ்வரன் அவிலி “தங்களது  நிறுவனம் உள்நாட்டில் பங்குதாரர்களை எதிர்பார்ப்பதாகக் கூறினார். மேலும், தங்களின்  சரக்கு போக்குவரத்திலும் பங்குதாரர்கள் வரவேற்கப்படுவதாகவும், சென்னை, சிங்கப்பூர் வாராந்திர சேவை அதிகரித்திருப்பதாகவும் கூடிய விரைவில் கொல்கத்தா, கோயம்புத்தூர்  போன்ற நகரங்களுக்கு விமானசேவை அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் பயணிகள் விமானம்  80 சதவீதம் உபயோகிக்கப் படுவதையும் சுட்டுக்காட்டிய அவர், எங்களுடைய திட்டத்தை சாத்தியமாக்க கூடிய பங்குதாரர்களை எதிர்நோக்கியிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.