Home நாடு ஒப்ஸ் டவுலாட் நடவடிக்கையின் கீழ் இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

ஒப்ஸ் டவுலாட் நடவடிக்கையின் கீழ் இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

625
0
SHARE
Ad

 

indexசபா,மார்ச்.11-  ஒப்ஸ் டவுலாட் தொடங்கி, இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுவரை 22 சடலங்கள் சவப்பரிசோதனைக்காக தாவாவிலும் லாஹாட் டத்துவிலுமுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நேற்றுக் காலை 4 மணிக்கு முடிவடைந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மேலும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சபா போலீஸ் கமிஷனர் ஹம்சா தாயிப்  தெரிவித்தார். அதைச் சேர்த்து இதுவரை கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

ஆயுதம் தாங்கிய ஊடுருவல்காரர்களின் தலைவர் அஸ்ஸிமுடி கிராம்,  சபாவின் வேறு பகுதியில்  பதுங்கியிருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதைக் கேட்டபோது அவர் இருந்தால் கைது செய்திருப்போமே என்று அவர் பதிலளித்தார்.

கம்போங் தண்டுவோவில் போலீஸ் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட்டன என்றும் அங்கு குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லலாம் என்றும் ஹம்சா தெரிவித்தார்.

இதனிடையே, நேற்றுக் காலை சிவப்புப் பகுதியில் ஊடுருவல்காரர்களைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட பதின்ம வயது இளைஞனை அடையாளம் காண போலீஸ் முயன்று வருகிறது.

குற்றவியல் புலனாய்வுத் துறை அம்முயற்சியில் ஈடுபபட்டிருப்பதாக ஹம்சா குறிப்பிட்டார்.

நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படைகள் சிவிலியன்களையும் கருவுற்ற தாய்மார்களையும் நோக்கிச் சுட்டதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை அவர் மறுத்தார்.

“அதை நான் வன்மையாக மறுக்கிறேன். நேற்று நடந்ததைப் பாருங்களேன். பாதுகாப்புப் படையினர் சுட நினைத்திருந்தால் எவரையும் கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லையே”, என்றார். பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் புகார் எதுவும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.