Home Featured இந்தியா இந்தியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

இந்தியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

521
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

சென்னை: இன்று தமிழக சட்டமன்றம் கூடுகின்றது – கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவரப்படலாம் என எதிர்பார்ப்பு!

மும்பை: மும்பை புறநகர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது இன்று தண்டனை வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

இராமேஸ்வரம்: இலங்கைப் பிரதமர் ரணில் இந்திய வருகையை முன்னிட்டு 16 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிப்பு.

புதுடில்லி: மெக்கா பளுதூக்கி விபத்தில் மரணமடைந்த இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக அடையாளம் காணப்பட்டது.

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் – பாஜக அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பேச்சு

புதுடில்லி: ஏமன் நாட்டில் சிக்கிக் கொண்டுள்ள 70 குஜராத் மீனவர்களை மீட்க இந்திய அரசாங்கம் முயற்சி

புதுடில்லி: சிம்லா இரயில் விபத்தில் 2 பிரிட்டிஷார், 13 பேர் காயம் – அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பாராட்டு!