Home இந்தியா அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்

565
0
SHARE
Ad

m-k-stalinதர்மபுரி- முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு அறவே செயல்படாத அரசு என்றும் அவர் கூறியுள்ளார்.

தர்மபுரியில் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் முடக்கப்பட்டதை திமுக கண்டித்துள்ளது. இதையடுத்து அங்கு நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தொழிலாளர்கள் நலனில் அதிமுக அரசுக்கு அறவே அக்கறை இல்லை என்றும், தொழிலாளர்கள் உதவிகள் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

#TamilSchoolmychoice

“தமிழக முதல்வர் ஜெயலலிதா நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் கூட செயல்படுவதில்லை. அதிமுக அரசின் நிலையும் அப்படித்தான் உள்ளது.”

“முதல்வர் ஜெயலலிதா, தொழிற்சங்க நிர்வாகிகளை இழிவுபடுத்துவதுடன் அவர்களுக்கு எந்த நன்மைகளும் செய்வதில்லை. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இருநூறுக்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றைச் செயல்படுத்தவில்லை” என்று ஸ்டாலின் கூறினார்.

முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் நாடகம் என்பது மக்களிடம் எடுத்துச் சொல்லப் போவதாகக் குறிப்பிட்ட அவர், அம்மாநாடு குறித்த விவரங்களை பேரவையில் 110ஆவது விதியின் கீழ் வெளியிடத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.