ஜோகூர்,மார்ச் 12 -ஜோகூரில் நேற்று குறைந்த மாத வருமானத்தைப் பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு ‘கரிஷ்மா ஹதி ராக்யத்’என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 200 ரிங்கிட்டுக்கான காசோலையை ஏறக்குறைய 17,000 பேர் பெற்றனர்.இது பற்றி ஜோகூர் மாநில பெண்கள் மற்றும் குடும்ப வளர்ச்சி, சமூக நலம் மற்றும் சுகாதார குழு ஆகியவற்றின் தலைவர் டாக்டர் ரோபியா கோசை கூறுகையில்,
” ‘கரிஷ்மா ஹதி ராக்யத்’ என்ற இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் நிதியானது சுமார் 200,000 மக்கள் பயனடையும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைபவர்கள் மற்ற பிற திட்டங்களான ‘ஒரே மலேசியா’ போன்றவற்றால் பயனடைய முடியாது.
ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த 26 சமூக நலம் மற்றும் சுகாதார குழுத் தலைவர்களின் மூலம் இந்நிதியானது இம்மாத இறுதிக்குள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித் தொகை நிச்சயம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.