Home இந்தியா திகார் சிறையில் பாதுகாப்பு குறைபாடு: ஷிண்டே ஒப்புதல்

திகார் சிறையில் பாதுகாப்பு குறைபாடு: ஷிண்டே ஒப்புதல்

502
0
SHARE
Ad

indexபுதுடில்லி, மார்ச்.12- திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டில்லி கற்பழிப்பு குற்றவாளி ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷி்ல்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதற்கட்ட விசாரணையில் ராம்சிங் திகார் சிறை 3-வது பிளாக்கில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த தகவல் இன்று அதிகாலை 5.45 மணிக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள மேலும் 4 குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெயலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதற்கு சிறை நிர்வாகம் தான் பொறுப்பு. இதில் தவறு எங்கே நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.