Home Featured கலையுலகம் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

834
0
SHARE
Ad

kabali1சென்னை – ரஜினிகாந்த் நடிப்பில், ‘மெட்ராஸ்’ பட இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும் கபாலி படத்தின் முதல் பார்வை சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் படத்தில் இடம்பெறும் வழக்கான பிரபல தொழில்நுட்ப கலைஞர்களோ, இசையமைப்பாளரோ இல்லாமல், ஒன்று இரண்டு படங்களில் மட்டுமே பணியாற்றி இருக்கும் திறமை வாய்ந்த இளைஞர்களைக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை பற்றி அரசியல் பேசப்போகும் படமாக கபாலி இருக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

kabali-firstரஜினியே கபாலியை பாட்ஷா அளவிற்கு எதிர்பார்க்காதீர்கள் என்றாலும், ரஜினியின் தோற்றம் மற்றும் கதையம்சம் பாட்ஷா படத்தை மிஞ்சும் என்றே தோன்றுகிறது.