Home Featured நாடு பொறியியலாளர் டத்தோ சாந்தகுமார் காலமானார்!

பொறியியலாளர் டத்தோ சாந்தகுமார் காலமானார்!

586
0
SHARE
Ad

shantakumar-datoகோலாலம்பூர் – நாட்டின் முன்னணி பொறியியல் துறை நிறுவனமான எச்.எஸ்.எஸ்.எஞ்சினியரிங் (HSS Engineering) நிறுவனத்தின் இயக்குநரும், பங்குதாரருமான டத்தோ எஸ்.சாந்தகுமார் (படம்), இன்று சுபாங்கிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நமது நாட்டின் முன்னணி பொறியியலாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த  சாந்தகுமார் மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக, தொழிலியல் சம்மேளனத்தில் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

மலேசிய கிரிக்கெட் சங்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டியவர் சாந்தகுமார். பொது இயக்கங்களிலும் ஈடுபாடு காட்டி வந்த சாந்தகுமார், விளம்பரமில்லாமல், பல நல்ல காரியங்களுக்கு பொருளுதவி அளித்து வந்தவராவார்.

#TamilSchoolmychoice

சிறுநீரகக் கோளாறினால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)