Home Featured கலையுலகம் தனிஒருவனில் அரவிந்த்சாமிக்குப் பதிலாக மாதவன் நடித்திருந்தால்?

தனிஒருவனில் அரவிந்த்சாமிக்குப் பதிலாக மாதவன் நடித்திருந்தால்?

857
0
SHARE
Ad

220px-Major_Ravi

கோலாலம்பூர் – இன்றைய நவீன காலத்தில், திரையின் அளவு சுருங்கி எப்படி கையடக்கக் கருவிகளிலும் சினிமா வரத் தொடங்கியதோ, அதே போல், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களின் வரவையடுத்து சினிமா நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்குமான இடைவெளியும் குறைந்துவிட்டது.

அந்த வகையில், நடிகர் மாதவன் இன்று பேஸ்புக் மூலமாக தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் மாதவனிடம் கேட்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவற்றுள் மிகவும் சுவாரஸ்யமானவை இதோ:-

உங்கள் படங்கள் தமிழில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன , உங்களின் அடுத்த படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்? உங்களது புது கெட்டப் அருமை..

அந்த புது கெட்டப்பிற்காக நிறைய வேலை செய்துள்ளோம் உங்களை கண்டிப்பாக அது அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

தனிஒருவன் சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரம் போல் நடிப்பீர்களா?

அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னைத்தான் முதலில் கேட்டார்கள்.. அரவிந்த் நடித்ததில் எனக்கு சந்தோஷம். நல்ல நடிகர் அவர்.

ஏன் சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை?

அப்போது நான் இறுதிச்சுற்று படத்தின் நடுவில் இருந்தேன்..

நீங்க அலைபாயுதே மாதிரி திரும்பவும் ஒரு ரொமாண்டிக் படம் பண்ணனும்..

ரொம்ப கஷ்டம் பிரதர்.. எனக்கு இப்பவே 45 வயதாகிவிட்டது. அந்த மாதிரி இளைமையான தோற்றத்தைக் கொண்டு வருவது இனி முடியாது..

கேரளாவில் நீங்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?

நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பச்சைத் தமிழன். நிறைய பேர் என்னை கேரளாவைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள். கேரளாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நீங்கள் நடித்துள்ள ஹாலிவுட் படம் எப்போது வெளிவருகிறது?

விரைவில்.. நானும் அதற்காகக் காத்திருக்கிறேன்..

உங்களின் அடுத்த மலேசியப் பயணம் எப்போது? மலேசிய ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்..

எனக்கு மலேசியா மிகவும் பிடிக்கும். எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் வந்துகொண்டிருக்கிறேன்.

உங்கள் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள்?

மணிரத்னம் சார், கமல் சார், அமித்ஜி மற்றும் ரஜினி சாரை சந்தித்த நிமிடங்கள் தான்..

இப்படியாக நடிகர் மாதவன் இன்னும் பல கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் பதிலளித்துள்ளார்.

தொகுப்பு: செல்லியல்