Home One Line P2 ‘நான் 58 விழுக்காடுதான் எடுத்தேன்’- மாணவர்களுக்கு மாதவன் உத்வேகம்!

‘நான் 58 விழுக்காடுதான் எடுத்தேன்’- மாணவர்களுக்கு மாதவன் உத்வேகம்!

705
0
SHARE
Ad

சென்னை: நேற்று புதன்கிழமை இந்தியாவில் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்  வெளியானது.

கடந்த கல்வி ஆண்டில், 10- ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 91.46 விழுக்காட்டினர் தேர்த்திப் பெற்றுள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது.

மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 1,885,885 மாணவர்களில், 1,873,015 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 1,713,121 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள்.

#TamilSchoolmychoice

மாணவிகளில், 93.31 விழுக்காட்டினரும், மாணவர்களில், 90.14 விழுக்காட்டினரும் தேர்ச்சியடைந்துள்ளார்கள். மூன்றாம் பாலின மாணவர்களில் 78.95 விழுக்காட்டு பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, இந்த தேர்வு முடிவுகள் குறித்து பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் மாதவன் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

“தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தாங்கள் ஊகித்ததை விட அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதே சமயம் மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் பொதுத் தேர்வில் 58 விழுக்காடுதான் எடுத்தேன். ஆகையால் எதற்கும் கவலைப் படாதீர்கள். ஆட்டம் இன்னும் தொடங்க இல்லை” என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.