Home One Line P1 நாடு முன்னேற பல இனங்கள் கொண்ட கட்சித் தேவை!

நாடு முன்னேற பல இனங்கள் கொண்ட கட்சித் தேவை!

553
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியர்கள் எந்தவொரு இன பேதமின்றி வாழ வேண்டும்.

செவ்வாய்க்கிழமை நிருபர்களுடனான சந்திப்பின் போது இதனை சபா முதல்வர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.

அண்மையில் ஷாபி அப்டால் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆயினும், அது குறித்து இன்னும் மேற்கொண்டு பேச உள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“முதலில் நாம் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும். இரண்டாவதாக பொருளாதாரத்தை மீட்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தற்போது நாடு இனம், மதம் போன்ற விவகாரங்களில் பிளவுப்பட்டிருப்பதாக ஷாபி தெரிவித்தார்.

“இப்போது பாருங்கள், நாடாளுமன்றத்தில் தோல் நிறம் குறித்த கருத்துகள் பேசப்படுகிறது. அமெரிக்காவில் நடப்பது போல,

“300 ஆண்டுகளுக்குப் பிறகும் அமெரிக்கா அதே பிரச்சனையுடன் உள்ளது. அடிமைத்தனம் அவர்களது எண்ணத்தில் அப்படியே உள்ளது. வெள்ளை, கருப்பு தோல் பிரச்சனை இன்னும் நீடிக்கிறது.

“இந்த நிலைமை நம் நாட்டில் நடைபெறக் கூடாது” என்று ஷாபி குறிப்பிட்டார்.

முதல் நாள் நாடாளுமன்ற அமர்வின் போது, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவுக்கு எதிரான, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகீமின் கூற்று குறித்து அவர் பேசினார்.

மலேசியர்கள் இன்று பிளவுப்பட்டிருப்பது தமக்கு நல்லதொறு சூழ்நிலையை பிரதிபலிக்கவில்லை என்று அவர் கூறினார்.

“உந்த உலகம் அனைவருக்குமானது. நமக்கான சிந்தனையுடன் நாம் இருக்க முடியாது. ” என்று அவர் கூறினார்.

பல்வேறு இனங்களைக் கொண்ட கட்சியைத் தேர்தெடுக்கும் காலம் வந்து விட்டது.

“நான் அம்னோ உதவித் தலைவராக இருந்த போது, நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். அதற்கு பல இனம் கொண்ட கட்சித் தேவை என்று கருதினேன்.

“அதனால்தான் நான் சபாவிற்கு திரும்பச் சென்றேன். அங்கு மக்கள் பல்வேறு இனங்கள், மதங்களுடன் உள்ளனர்.

“அதுதான் முன்னோக்கிச் செல்லும் ஒரே பாதை. ” என்று அவர் குறிப்பிட்டார்.

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம்மின் பாலின, இனவெறி கூற்று பலரது கவனத்தை ஈர்த்தது.

இருப்பினும், அப்துல் அசிஸ் தாம் யாரையும் அவ்வாறு அழைக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தார்.

“நான் யாரையும் கருமை என்று அழைக்கும் எண்ணம் இல்லை என்று மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், கடவுள் என்னை கருமையாக படைத்துள்ளார். இதன் மூலம் நான் சொன்ன வார்த்தையை மீட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்கிறேன், ” என்று அவர் கூறினார்.

இருப்பினும், கஸ்தூரி தனது இடத்திலிருந்து எழுந்து அப்துல் அசிஸ் கொடுத்த காரணத்தை ஏற்கவில்லை.

“தூள் பயன்படுத்துவதற்கான பிரச்சனையை ஏன் எழுப்ப வேண்டும்? ” என்று கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.

இதே சம்பவம் மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அசார் உறுதியளித்திருந்தார்.