கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டரசுப் பிரதேசமான லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி இன்று வியாழக்கிழமை காலை (அக்டோபர் 14) ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டு வந்துள்ளது. எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்பது குறித்து இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் எம்ஏசிசி சட்டம் 2009 – பிரிவு 23 (1) இன் கீழ் அவர் குற்றம் சாட்டப்படுவதாக ரோஸ்மான் இஸ்லியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தனது பதவியைப் பயன்படுத்தி தனக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ இலாபம் ஏற்படுத்தித் தரும் விதத்தில் நடந்து கொண்டார் என்ற அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுகின்றன என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
2013-இல் அம்னோ வேட்பாளராக லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ரோஸ்மான் இஸ்லி 2018 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இருந்தாலும் அதன் பின்னர் அம்னோவிலிருந்து வாரிசான் கட்சிக்குத் தாவினார்.
2013-இல் அம்னோ வேட்பாளராக லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் 2018 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இருந்தாலும் அதன் பின்னர் அம்னோவிலிருந்து வாரிசான் சபா கட்சிக்குத் தாவினார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal