Home உலகம் பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி

707
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகத்திற்கு செல்லுப் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட தொற்று இரத்தத்திற்கும் பரவியதன் காரணமாக அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் நோக்கில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் மற்றபடி அவர் நலமுடனே உள்ளார் என்றும் அவரின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

75 வயதான பில் கிளிண்டன்,  தனது அறவாரியத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) கலிபோர்னியா மாநிலத்திற்கு வந்திருந்தார்.

#TamilSchoolmychoice

அப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2004-ஆம் ஆண்டில் இருதயத்தில் ஏற்பட்ட 4 அடைப்புகளை சரிசெய்வதற்காக அவர் இருதய சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் 2010-ஆம் ஆண்டில் அவரின் இருதயத்திற்கு செல்லும் இரத்த நாளம் ஒன்றில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக அவருக்கு 2 சிறு இணைப்புக் குழல்கள் (stents) பொருத்தப்பட்டன.

எனினும் பில் கிளிண்டனின் தற்போதைய உடல் நலக் குறைவு அவரின் இருதய சிகிச்சை சம்பந்தப்பட்டதல்ல என்றும் அவரின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.