Home இந்தியா மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

1085
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இங்குள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

89 வயதான அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று புதன்கிழமை (அக்டோபர் 13) மாலை இந்திய நேரப்படி 6.15 மணிக்கு அவர் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

2004 முதற்கொண்டு இரண்டு தவணைகளுக்கு அவர் பிரதமராக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி வகித்தார். 2014-இல் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal