Home One Line P2 திகில் நிறைந்த ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது!

திகில் நிறைந்த ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது!

1005
0
SHARE
Ad

சென்னை:   தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முக்கியப் பாத்திரங்களில் சிறப்பான தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய அனுஷ்கா தற்போது நடிகர் மாதவனுடன் இணைந்துநிசப்தம்என்ற படத்தில் நடித்துள்ளார்.

பாகுபலியின் வெற்றிக்கு பின் இவர் ‘பாகமதி‘ படத்தில் நடித்திருந்தார்இந்த படத்தை அடுத்து தற்போது ‘நிசப்தம்என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் பலர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ்தெலுங்குஇந்திஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வருவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இப்படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திகில் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: