Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம்: தவறாக நடத்தி, சித்திரவதைக்கு ஆளான குற்றச்சாட்டு டிசம்பர் 5, 6-இல் விசாரணை!

விடுதலைப் புலிகள் விவகாரம்: தவறாக நடத்தி, சித்திரவதைக்கு ஆளான குற்றச்சாட்டு டிசம்பர் 5, 6-இல் விசாரணை!

767
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் புகார்களை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விசாரித்தது. 

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டபோது மோசமாக நடத்தப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

பி.சுப்ரமணியம் (57) மற்றும் ஏ.கலைமுகிலன் (28) ஆகிய இரு சந்தேக நபர்களிடமிருந்து கடந்த நவம்பர் 1-ஆம் தேதி எடுக்கப்பட்ட வாக்குமூலங்கள் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் இது விசாரிக்கப்பட்டதாக கீழ்நிலை நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி கூறினார்.

#TamilSchoolmychoice

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 133-வது பிரிவின் கீழ் இப்புகாரை விசாரிக்க நீதிமன்றம் டிசம்பர் 5 மற்றும் 6-ஆம் தேதிகளை முடிவு செய்துள்ளது.

நவம்பர் 1-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் புகார்களை நீதிமன்றம் விசாரித்தது. அதன்படி, இந்த நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட குற்றங்களை கவனித்து, குற்றவியல் நடைமுறை பிரிவு 133-இன் கீழ் புகாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஎன்று அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சுப்ரமணியத்தின் வழக்கறிஞர் செல்வம் மற்றும் கலைமுகிலனின் வழக்கறிஞர் எம்.வி.யோகேஸ் அளித்த புகாரைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறை பிரிவு 131-இன் கீழ், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி இருவரிடமிருந்தும் புகார் அறிக்கையை அசுரா பதிவு செய்ய முடிவு செய்தார்.

அவர்களின் புகார்களில் அச்சுறுத்தல், இருண்ட அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது, சிறையில் படுக்கையும் தலையணையும் இல்லை, கொசுக்கள், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த கழிப்பறை ஆகியவை அடங்கும்.