Home One Line P1 விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் விடுதலையானது காவல் துறை, அமைச்சுகளுடன் ஆலோசிக்கப்படும்!

விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் விடுதலையானது காவல் துறை, அமைச்சுகளுடன் ஆலோசிக்கப்படும்!

1250
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிதாக நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்ட 12 மலேசியர்களுக்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளை கைவிட்டதைப் பற்றி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அமைச்சக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திப்பதாக ஹம்சா கூறினார்.

“அது குறித்த தகவல்களைப் பெற்றவுடன், காவல்துறையின் உயர் அதிகாரிகளுடனும், அமைச்சகத்துடனும் கலந்துரையாடுவேன்.”

#TamilSchoolmychoice

“இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். பயங்கரவாதம் என்பது நம் நாட்டில் ஒரு பிரச்சனை மட்டுமல்ல, இது உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு பிரச்சனையாகும்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் 12 பேருக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கான முடிவை அறிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் விவகாரங்களில் தலையிட சட்டத்துறைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்திருந்தார்.