Home One Line P1 விடுதலைப் புலிகள் தொடர்பாக கைதான கடைசி 2 பேரும் விடுதலை!

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைதான கடைசி 2 பேரும் விடுதலை!

1020
0
SHARE
Ad

கோலாலம்பூர்:விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு நபர்களை, இரண்டு தனி உயர் நீதிமன்றங்கள் இன்று புதன்கிழமை விடுவித்தன.

இதன் விளைவாக இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேரும் இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

58 வயதான பி. சுப்பிரமணியம், எஸ்.தனகராஜ், 27 ஆகியோர் இன்று விடுதலையாகி உள்ளனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அரசு வழக்கறிஞர்கள் முகமட் பார்ஹான் அலிப் மற்றும் முகம்ட் அசிராப் ஆகியோர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 254 (1)- இன் படி வழக்கை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் குற்றம் சாட்டப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.