Home One Line P1 “ஆட்சி யாருடையது என்பதை மக்களே முடிவு செய்யட்டும்!”- பெர்சே

“ஆட்சி யாருடையது என்பதை மக்களே முடிவு செய்யட்டும்!”- பெர்சே

662
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவுவது நாட்டுக்கு நல்ல தேர்வாகாது என்று பெர்சே கூறியுள்ளது.

ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டால், எதிர் தரப்பு இருக்கமாட்டார்கள் என்றும், அதனால் தவறுகளைச் சுட்டிக் காட்ட இயலாமல் போகும் என்றும் அது கூறியது.

“ஒற்றுமை அரசாங்கத்தின் ஆபத்து என்னவென்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நிலை உண்டாகும், இதனால், மேலும் தவறுகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலை நடக்க அனுமதிக்க முடியாது,” என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

முன்னதாக, டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக பணியில் அமர்ந்த முதல் நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் அரசாங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளால் நாடு பரபரப்பானது.

கடந்த பொதுத் தேர்தலில் மக்களிடமிருந்து ஆணையைப் பெற்ற நம்பிக்கைக் கூட்டணி, கடந்த திங்களன்று வீழ்ந்தது.

“ஜனநாயகம் என்பது பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பாகும், இது அவர்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் கொள்கைகளை நிர்வகிக்கும் மற்றும் செயல்படுத்தும் உரிமையைப் பெறுகிறது.”

“அவ்வாறு செய்ய அவர்கள் ஆட்சி செய்யத் தவறினால், அவர்கள் தேர்தலில் நிராகரிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து வாக்குகளைப் பெற அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்,” என்று பெர்சே கூறியது.

நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது, எந்த கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை மாமன்னர் தீர்மானிக்க முடியாவிட்டால், அடுத்த விருப்பம் பொதுத் தேர்தலை நடத்துவதாகும் என்று அவ்வமைப்புக் கூறியது.

“நாடாளுமன்றத்தை கலைத்து, அரசாங்கமாக மக்கள் விரும்பும் கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களிக்க மக்களை அனுமதிக்குமாறு மாமன்னரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அது குறிப்பிட்டது.