
கோலாலம்பூர்: நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர்.
வான் அசிசாவுக்கு எழுதிய பதிவில், “40 ஆண்டுகளின் கருணைகள், 40 ஆண்டுகளின் தைரியங்கள், 40 ஆண்டுகளின் விசுவாசம், 40 ஆண்டுகளின் பலம்.” என்று அன்வார் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வான் அசிசா ஒரு கேக்கை வெட்டுவது போன்ற படத்தை அன்வார் பதிவேற்றியிருந்தார். சில பிகேஆர் தலைவர்களும் உடன் இருந்தனர்.