Home One Line P1 மக்கள் நம்புவதற்கு அன்வார் நிழல் அமைச்சரவையை உருவாக்க வேண்டும்- பெர்சே 2.0

மக்கள் நம்புவதற்கு அன்வார் நிழல் அமைச்சரவையை உருவாக்க வேண்டும்- பெர்சே 2.0

731
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாக்குப்போக்குகளை நிறுத்தி நிழல் அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் குழு பெர்சே 2.0 இன்று வலியுறுத்தியது.

கூட்டணியை திறம்பட ஒழுங்கமைக்க அன்வார் எதிர்க்கட்சியின் பல்வேறு வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும் என்று பெர்சே தலைவர் தோமஸ் பான் கூறினார்.

“காரணம், எதிர்க்கட்சி இப்போது தனித் தனியாக இருப்பதால், ஒருவித நிழல் அமைச்சரவை உருவாக்குவதற்கு நீங்கள் எதிர்க்கட்சியை ஒன்றிணைக்க முடியாவிட்டால், ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுமக்கள் உங்களை எவ்வாறு நம்புவார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

“சாக்கு போக்குகள் போதும். அரசியலுக்கான ஒரு தொழில்முறை அணுகுமுறையை நோக்கி நாம் செல்லத் தொடங்கும் நேரம் இது,” என்ரு அவர் கூறினார்.

அண்மையில், பிகேஆர் நாடாளுமன்ற உருப்பினர்கள் தேசிய கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததை அடுத்து, அன்வார் இப்ராகிம், இன்னும் நம்பிக்கை கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறிவருகிறார்.