Home One Line P2 மக்கள் நீதி மய்யம்: தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

மக்கள் நீதி மய்யம்: தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

820
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம தேதி நடைபெற இருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் குறித்த விவாதங்கள் கட்சிகளுக்கிடையே நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். பெண்கள், விளையாட்டு, மற்றும் இளைஞர்களுக்கு என்று ஒவ்வொன்றிலும் 7 செயல்திட்டங்களை அறிவித்தார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் கீழே காணலாம்:

#TamilSchoolmychoice

அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத் துறையிலும் 50 விழுக்காடு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.

துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.

பெண்களுக்கான உதவி எண் 181-இல் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.

பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசே கொள்முதல் செய்து கிராமம் மற்றும் நகர்ப்புற, ஏழைப் பெண்கள் மற்றும் இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்.

பெண்களால் பெண்களுக்கு என்று நடத்தப்படும் மகளிர் வங்கி மாவட்ட அளவில் உருவாக்கப்படும்.

ஒற்றைத் தாய்மார்களுக்கு கல்வி, வேலை, திறன் மேம்பாடு, சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவது உறுதி செய்யப்படும்.

ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறையாவது அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக ஆரோக்கியப் பரிசோதனை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்யும்.

இளைஞர்களுக்கு 50 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். வேலையை நீங்கள் தேடாதீர்கள். வேலை உங்களைத் தேடி வரும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு தகுதி மற்றும் வாழும் சூழலின் தேவை அடிப்படையில் வேலையின்மை நிவாரணம் வழங்கப்படும்.

ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை அரசு பள்ளிகள், கல்லூரிகள், வீடுகளில் இருந்து தொடங்கி வழி நடத்தப்படும்.

பொது – தனியார் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒன்றிய அளவிலும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவப்படும்.

மனித நேய சர்வதேச பார்வையாளர்கள் விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும்