Home One Line P1 தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்

தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்ததாக கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

அம்னோ, மசீச, மஇகா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி கூட்டணி இந்த முடிவை எடுத்ததாக பெயர் குறிப்பிட மறுத்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

“தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேசிய முன்னணி முடிவு செய்தது. இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. பிபிஆர்எஸ் தலைவர் ஜோசப் குருப் மட்டுமே வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜசெக மற்றும் அமானா ஆகியோருடனான ஒத்துழைப்பை நிராகரிக்க தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், ஒத்துழைப்புக்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறதா என்று கேட்டபோது, ​​அதை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

“அது இரகசியம்” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்சியின் உச்சமன்றக் குழு முடிவை தெரிவிக்க அம்னோ பிரதமர் மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியதாக நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் பின்னர் பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடினும் ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அம்னோவின் முடிவு விவாதிக்கப்படவில்லை என்று அதே வட்டாரம் தெரிவித்தது.