Home One Line P2 ‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு!

‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு!

1048
0
SHARE
Ad

சென்னை: நடிகர் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) ‘தலைவி’ திரைப்பட தயாரிப்புக் குழுவினர் அரவிந்த்சாமி ஏற்று நடிக்கும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தின் குறுமுன்னோட்டத்தை வெளியிட்டனர்.

வெளியிட்ட சிறிது நேரத்தில் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, மிகவும் நேர்த்தியான தேடல் என்று திரைப்படக் குழுவினரை பாராட்டியுள்ளனர். முன்னாள் அதிமுக தலைவரான ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமாக வரவிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் திலகமாக அரவிந்த்சாமி நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

கங்கனா ரனாவுட் இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி வளம் வருவது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை விஜய் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த்சாமி நடித்த காட்சியின் குறுமுன்னோட்டத்தைக் காணலாம்: