Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குப்பதிவு!

கிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குப்பதிவு!

706
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கிமானிஸ் இடைத்தேர்தலில் காலை 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது.  மாலை 5 மணி வரையிலும் மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

மொத்தம்  29,619 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

கடந்த செவ்வாயன்று, முன்கூட்டிய வாக்களிப்பில் ஒன்பது வாக்காளர்களில் எட்டு பேர் வாக்களித்தனர்.  மேலும், 35 அஞ்சல் வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

கிமானிஸ் இடைத்தேர்தலில் வாரிசன் கட்சியைச் சேர்ந்த டத்தோ காரிம் புஜாங் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் அலாமின் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமட் அலாமின் தனது வாக்குச்சீட்டை கம்போங் கெலாடுவானில் உள்ள அவர் லேடி அப் பாதிமா தேசியப் பள்ளியில் செலுத்தினார்.

இதனிடையே, காலை 9 மணி அளவில் வாரிசன் வேட்பாளர் டத்தோ காரிம் புஜாங் கிமானிஸ் பாப்பார் தேசியப் பள்ளியில் தமது வாக்கினைச் செலுத்தினார்.

வாக்குப்பதிவு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், பார்வையிடவும் தேர்தல் ஆணையம் 653 தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளது.

சுமார் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்றும், வாக்கெடுப்பு முடிவுகள் இரவு 10 மணிக்குள் அறியப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ அனிபா அமானின் வெற்றியை நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.