Home One Line P2 கங்கனா ரனாவுட் வீடு இடிப்பு, ‘வை பிளாஸ்’ பாதுகாப்பு சர்ச்சையாக மாறியது

கங்கனா ரனாவுட் வீடு இடிப்பு, ‘வை பிளாஸ்’ பாதுகாப்பு சர்ச்சையாக மாறியது

700
0
SHARE
Ad

மும்பை: சண்டிகரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் மும்பை விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவுத் தரை இறங்கியதும் அனைவரின் பார்வையும் அவர் மீது விழுந்தன.

மும்பை காவல் துறையினர், சிவசேனா கட்சிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் வாய்ச் சண்டையைத் தொடர்ந்து அவர் முதல் முறையாக மும்பைக்குத் திரும்பினார்.

தமது சொகுசு வீடானது செவ்வாய்க்கிழமை இடிக்கப்படுவதற்கு முன்னர், கங்கனாவுக்கு எந்தவொரு அறிவிப்பையும் மும்பை மாநகராட்சி அனுப்பவில்லை என்று அவர் டுவிட்டரில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் தனது சொகுசு வீட்டில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை இடிக்கும் காணொளிகளையும் வெளியிட்டார்.

“வாழ்க்கை ஒரு சக்கரம். நினைவில் கொள்ளுங்கள் நேரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. உண்மையில், நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். காஷ்மீர பண்டிதர்கள் உணர்ந்திருக்க வேண்டியதை நான் இப்போது உணர்கிறேன். நான் அயோத்தி மற்றும் காஷ்மீர் தொடர்பாக ஒரு படம் செய்வேன், ” என்று கங்கனா கூறியுள்ளார்.

விமான நிலையத்தில், அவர் தரையிறங்கியபோது, ​​சிவசேனா ஆர்வலர்கள், கங்கனாவுக்கு எதிராகப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகையின் கருத்துக்களைக் கண்டித்து, அவருக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்ட அவரது படங்கள் சமூக ஊடகங்களில் திகைப்பை ஏற்படுத்தியது.

பலர் “வரி செலுத்துவோர் பணத்தை வீணடிப்பதாக” புலம்பினர். தற்போதைய சர்ச்சையின் வெளிச்சத்தில் நடிகைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘வை பிளாஸ்’ (Yplus) பாதுகாப்பு வழங்கியதை ஒரு சில நடிகர்கள் உட்பட அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

அண்மையில், தற்கொலை செய்துக் கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தொடர்ந்து பாலிவுட்டில் நடந்து வரும் ஓரங்கட்டுதல் வழக்கத்தை கங்கனா தைரியமாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பெரும்பாலோரிடமிருந்து ஆதரவும் கிடைத்து வருகிறது.