Home கலை உலகம் ஆண்டாள் கோவிலில் மாறு வேடத்தில் சாமி கும்பிட்ட விஜய்!

ஆண்டாள் கோவிலில் மாறு வேடத்தில் சாமி கும்பிட்ட விஜய்!

864
0
SHARE
Ad

jillaமதுரை – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாறுவேடத்தில் வந்து சாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்யால் பரபரப்பு ஏற்பட்டது.

தலையில் தொப்பி அணிந்து, முகத்தைத் துணியால் மறைத்தபடி நடிகர் விஜய் கோவிலுக்குள் நுழைந்தார்.

கோவில் ஊழியர் ஒருவர், அவர் யாரெனத் தெரியாமலே யாரோ ஒரு பிரமுகர் என நினைத்துக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று, கோவிலைச் சுற்றிக் காட்டி கோவில் குறித்த விவரங்களைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

சிறிது நேரம் கழித்தே விஜய்யின் குரலை வைத்து அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டு, ‘நீங்கள் நடிகர் விஜய் தானே?”என்று அவரிடம் கேட்டார்.

“ஆமாம். நான் விஜய் தான். யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். கூட்டம் கூடிப் பிரச்சினையாகி விடும். கோவிலில் யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்டு அவரும் மூச்சு விடாமல் விஜய் சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்.

விஜய், நெய்விளக்கு வாங்கி ஆண்டாள் சன்னதியில் சிறப்புப் பூசை செய்தார். சாமி தரிசனம் முடிந்து கோவில் வாசலுக்கு வந்த பின்பு தொப்பி, முகத்தில் மறைத்திருந்த துணியை அகற்றி விட்டு கோவில் ஊழியருக்கு நன்றி தெரிவித்து விட்டு, அங்கிருந்த மற்றவர்க்கும் கையசைத்து வணக்கம் சொல்லி விட்டுக் காரில் ஏறிப் பறந்துவிட்டார்.

நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த தகவல் பரவி ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.