Home Featured கலையுலகம் முடிவிற்கு வருகிறதா விஜய்-அஜித் பிரச்சனை?

முடிவிற்கு வருகிறதா விஜய்-அஜித் பிரச்சனை?

653
0
SHARE
Ad

ajithசென்னை – நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் வரிசை கட்டி காத்திருக்க, இணைய தளங்களிலும், திரைஅரங்குகளிலும் விஜய்-அஜித் ரசிகர்கள் இடையேயான பிரச்சனை யாரும் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு போய் கொண்டிருக்கிறது. அவர் படம் வெளியானால், பாராட்டு தெரிவிக்க ஒரு கூட்டம் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு காத்திருக்க, மற்றொரு கூட்டம் அந்த படத்தை எதிர்த்து விமர்சனம் செய்யவும் காத்திருக்கிறது.

இதனை ஒரு கடமையாகவே இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் செய்து வருகின்றனர். இடையில் யாரேனும் ஒருவர் கருத்து சொல்லப் போயி சிக்கிக் கொண்டால், அன்றைய ‘ஆடு’ அவர் தான். நட்பு ஊடகமா? அல்லது ஆபாச வலைதளமா? என்று கூறமுடியாத அளவிற்கு மிகக் கடுமையாகவும், வரம்பு மீறியும் விமர்சனங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு இம்சித்து வருகின்றனர்.

இவர்களின் பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடையாதா? என்று பொது நோக்கர்கள் புலம்பும் அளவிற்கு ஆகிவிட்ட நிலையில், இந்த பிரச்சனையை சேர்ந்தே சமாளிக்க விஜய்-அஜித் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

தற்போது வெளியாகி உள்ள தகவல்படி, அஜித் இன்று இரவு விஜய்யை அவரது இல்லத்தில் வைத்து சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இந்த தகவல் உண்மையா? இல்லை வதந்தியா? என்று ஆராய்வதை விட உண்மையாக இருக்கக் கூடாதா என்பதே பொது பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது.

ஒருவேளை இருவரும் சேர்ந்து ஒரு தம்படமோ (செல்ஃபி) அல்லது கூட்டறிக்கையோ வெளியிட்டால் இவர்கள் சமாதானம் அடைய வாய்ப்புள்ளது. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. எங்கள் தலைவர் தான் முதலில் சமாதானம் பேசச் சென்றார் என்று மீண்டும் சர்ச்சை வெடித்தாலும் வெடிக்கலாம்.