Home கலை உலகம் விஜய்யின் ’செல்பி புள்ள’ பாடலை பாராட்டிய அஜித்!

விஜய்யின் ’செல்பி புள்ள’ பாடலை பாராட்டிய அஜித்!

698
0
SHARE
Ad

vijay-and-ajithசென்னைம, செப்டம்பர் 24 – விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை டுவிட்டர், பேஸ்புக் என விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று இரு தரப்பு ரசிகர்களையும் மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நாம் அனைவருக்கும் தெரியும் தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார்.

அதேபோல், சமீபத்தில் “செல்பி புள்ள” பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, அனிருத்தும் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினாராம் அஜித்.