Home வணிகம்/தொழில் நுட்பம் சுபாங் – ஈப்போ இடையே புதிய சேவை – மலிண்டோ ஏர் அறிவிப்பு!

சுபாங் – ஈப்போ இடையே புதிய சேவை – மலிண்டோ ஏர் அறிவிப்பு!

646
0
SHARE
Ad

pesawat-malindo-airசுபாங், செப்டம்பர் 24 – சுபாங்கில் இருந்து ஈப்போவுக்கு புதிய விமான சேவையைத் தொடங்கி உள்ளது மலிண்டோ ஏர் விமான நிறுவனம்.

இந்த வழித்தடத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்களில் விமானங்களை இயக்க உள்ளது மலிண்டோ. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“பேராக்கில் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. சுற்றுலா மற்றும் தொழில் நிமித்தமாக பேராக் மாநிலத்திற்கு வருகை தரும் அதிகளவிலான சுற்றுலா பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எங்களது விமான சேவை அவர்களின் பொன்னான நேரத்தையும், பயணச் செலவையும் சேமிக்க கைகொடுக்கும்,” என மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டஅறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பேராக் அரசாங்கத்துடன் நாங்கள் நடத்திய சந்தை ஆய்வின் வழி எங்களது வாடிக்கையாளர்கள் பலரும் வார இறுதி நாட்களில் விடுமுறையைக் கழிக்க தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கிள்ளானில் இருந்து ஈப்போ செல்வது தெரியவந்தது.

“இந்தப் புதிய விமானச் சேவையின் வழி, போக்குவரத்து நெரிசலின்றி அவர்கள் சுகமாக, குறைந்த கட்டணத்தில் தங்களது பயணத்தை மேற்கொள்ள இயலும் என நம்புகிறோம். மேலும் வார இறுதியில் விடுமுறையைக் கழிக்க உகந்த இடமாக பேராக்கை மாற்ற முடியும் என்றும் நம்பிக்கை உள்ளது,” என்றார் சந்திரன் ராமமூர்த்தி.

புதிய முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கி பேராக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தப் புதிய விமானச் சேவை வழிவகுக்கும்
என்றார் சந்திரன்.

சுபாங் விமான நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மலிண்டோ விமானம் மாலை 6.50 மணிக்கு ஈப்போ சென்றடையும்.அதேபோல் ஈப்போவில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு சுபாங் வந்தடையும் என மலிண்டோ அறிவித்துள்ளது.