Home Featured கலையுலகம் தீபாவளியை மேலும் தித்திப்பாக்க அஸ்ட்ரோவில் புதிய படங்களும், நிகழ்ச்சிகளும்!

தீபாவளியை மேலும் தித்திப்பாக்க அஸ்ட்ரோவில் புதிய படங்களும், நிகழ்ச்சிகளும்!

631
0
SHARE
Ad

IMG_9589கோலாலம்பூர் – தீபாவளியன்று காலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இட்டிலி மற்றும் தோசையை பறிமாறிக்கொள்வது வெறும் சாதாரண நினைவுகள் அல்ல. கடந்த கால நினைவுகளை அலசிக் கொண்டே புதிய நினைவுகளை பதிவு செய்யும் ஒரு நிகழ்ச்சி.

#adalahidlithosai மலேசியர்களுக்கே உரிய பாணியில் அம்மாவின் அன்பும், சுவையான உணவும், ஒற்றுமை மனப்பான்மையையும் பறைசாற்றுவதற்கான சிறந்த ஒன்று. ஒரு சில இல்லங்களில் தீபாவளியன்று அம்மாவின் கைமணத்தில் மலர்ந்த இட்லி தோசையுடன் தீபாவளியைத் தொடங்குவார்கள்.

#adalahidlithosai -hashtag என்பது உணவுகளின் சொர்க்கமான மலேசியாவில் இருக்கும் மலேசியர்களை இணைக்கும் ஒன்று. இவ்வாண்டு தீபாவளி திருநாளில் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்பத்துடனும் நண்பர்களுடன் இணைந்து பல்வேறு வகையான நிகழ்ச்சிகளைக் கண்டுக் களித்து மகிழலாம். அஸ்ட்ரோவின் #adalahidlitosai தீபாவளிப் பிரச்சாரம், தீபாவளி நாளில் தயாரிக்கப்படும் இந்தியர்களின் மிக முக்கியமான உணவான இட்லி மற்றும் தோசையைப் பிரதிபலிக்கின்றது. அதை வேளையில், இந்தப் பிரச்சாரம் அஸ்ட்ரோ பல வகையான மற்றும் மாறுப்பட்ட நிகழ்ச்சிகளை இவ்வாண்டு தீபாவளிக்குக் கொண்டு வரவுள்ளது என்பதைக் குறிக்கின்றது.

#TamilSchoolmychoice

அண்மையில் த்ரிஷா, பிண்ணனிப் பாடகர் நரேஷ் ஐயர் மற்றும் நம் நாட்டின் கலைஞர்கள் கலந்து கொண்ட தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியுடன் நம்முடைய உள்ளூர் தயாரிப்பான அகிலேஸ்வரி, விக்டரி, அவனா நீ, இந்த தீபாவளிக்கு அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் பிரத்தியேகமாக ஒளியேறவிருக்கிறது.

மேலும், அஸ்ட்ரோ வெள்ளித்திரையில் அலைவரிசை 202-இல் நடிகர் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த ‘ஜ’, தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் சிவகார்த்திகேயன் ஸ்ரீ திவ்யா நடித்த ‘காக்கி சட்டை’ போன்ற திரைப்படங்களைக் கண்டுக் களிக்கலாம்.

அஸ்ட்ரோ எச்.டி வாடிக்கையாளர்களுக்குத் துல்லிய ஒளிப்பரப்பில் ஓகே கண்மாணி, உத்தம வில்லன், 36 வயதினிலே, கொம்பன், ரோமியோ ஜுலியட், மாஸ், வை ராஜா வை, நண்பேன்டா, எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் வலம் வருகின்றன.

தொடர்ந்து முதல் முறையாக இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’ துல்லிய அலைவரியில் உங்களின் வீட்டிலேயே ஒளிபரப்பாக உள்ளது.  சிவாஜியின் அனல் தெறிக்கும் வீர வசனங்களையும், முகத்திலே  விளையாடும் நவரசங்களையும் கண்டு களிக்க சிறந்த தருணம் இது. மேலும் என்றுமே மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள படங்களான ‘ காதல் கோட்டை’ மற்றும் ‘ துள்ளுவதோ இளமை’ உங்களின் பழைய நினைவுகளை புதிதாய் அசைபோட இன்னொரு வாய்ப்பினை கொடுக்கும் படங்கள்.

தனித்தன்மை வாய்ந்த பலவித நிகழ்ச்சிகள், குறிப்பாக ‘காதல் டூ கல்யாணம் (சந்தனு, பாக்கியராஜ், கீர்த்தி), மறைந்த மனோரமாவுடனான நேர்க்காணல், மனம் கவரும் மனோ சித்ரா இசை நிகழ்ச்சி, அப்துல் கலாம் சிறப்பு நிகழ்ச்சி, தடம் பதித்தவர்கள் – ரஜினி சிறப்பு அங்கம், யுவன் மியூசிகள் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரசிகர்களை இடைவிடாது உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகள் தீபாவளியன்று அஸ்ட்ரோவில் ஒளியேறவுள்ளது.

அஸ்ட்ரோ தங்கத்திரையில் (அலைவரிசை 241) அண்மையில் திரைக்கு வந்த ‘வாலு’ – சிம்பு & ஹன்சிகா, ‘சகலகலா வல்லவன் – ‘ஜெயம்’ ரவி & த்ரிஷா, ‘இது என்ன மாயம்’ – விக்ரம் பிரபு, ‘சண்டி வீரன்’ – இயக்குநர் பாலா மற்றும் அதர்வா ஆகியோர் காதல், ஆக்ஷன், நகைச்சுவை திரைப்படங்களை அலைவரிசை 241-இல் காணலாம்.

இதுமட்டுமில்லாமல், இந்த தீபாவளியில் பாலிவூட் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் , போலிஓன் எச்.டி அலைவரிசையில் 251 திரைக்கு வந்து சில மாதங்களே ஆன அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடிப்பில் ‘ ஷமிதாப்’, மாதவன் கங்கனா ரானாவுட் இணையில் ‘ தானு வெட்ஸ் மனு ரிடன்ஸ்’, ஆக்ஷன் திரைப்படமான ‘ பட்லபூர்’, அனுஷ்கா சர்மா நடிப்பில் ‘NH10’ மற்றும் சன்னி லியோன் நடிப்பில் ஆக்‌ஷன் படமான ‘ஏக் பஹேலி லீலா’ ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் ரசிகர்கள், 72 மணிநேரம் இடைவிடாது ரசிகர்களின் தீபாவளி வாழ்த்துகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகளை ஒளிபரப்பவிருக்கும் Sun Music Chat space -இன் சேவையைப் பெற அலைவரிசை 212 – க்குச் செல்லுங்கள்.

இந்தத் திருநாளை மேலும் குதூகலமாகக் கொண்டாட டி.எச்.ஆர் ராகாவின் இவ்வாண்டு தீபாவளி பாடலைக் கேட்டு மகிழுங்கள். ‘ராகாவின் தீபாவளி’ எனும் தலைப்பில் சுரேஷ் மற்றும் அகிலா கைவண்ணத்தில் எழுதப்பட்ட பாடல் வரிகளை டி.எச்.ஆர் ராகாவின் அனைத்து அறிவிப்பாளர்களும் பாடியுள்ளார்கள். இப்பாடலை வானொலி வாயிலாகவும் டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணலாம்.  அதை வேளையில், 5 அத்தியாயங்களில் உள்ளடக்கிய ‘கிச்சி கிச்சி தீபாவளி’ இடம்பெறவுள்ளது. அதுமட்டுமின்றி, எதிர்வரும் 31-ஆம் தேதி இரவு 7.00 – மணிக்கு பத்துமலைத் திருத்தலத்தில் ராகாவின் தீபம் எனும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீபங்களை ரசிகர்களுடன் இணைந்து ராகாவின் அறிவிப்பாளர்கள் ஏற்றிக் கொண்டாடவுள்ளார்கள்.

இந்த தீபாவளிக்கு நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் அபிமான நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை அஸ்ட்ரோவில் கண்டு களியுங்கள். Astro on the Go (AOTG) – இல் நீங்கள் உங்களின் smartphone மற்றும் tablet வழியாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் புதிய சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு AOTG – இல் ஏற்கனவே கிடைக்கும் வானவில் மற்றும் ஜெயா டிவி அலைவரிசைகளுடன் புதிதாக விண்மீன் HD மற்றும் ஸ்டார் விஜய் அலைவரிசைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த AOTG  செயலியை பதிவிறக்கம் செய்து இப்பொழுதே கண்டுகளியுங்கள்.  மேல் விபரங்களுக்கு நீங்க செல்ல வேண்டிய அகப்பக்கம் www.astroonthego.com.

தொடர்ந்து, அஸ்ட்ரோ ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு தீபாவளிக்கான பொருட்களை வாங்கினால் உங்களுக்கு ஒரு சிறப்பு சலுகை காத்துக் கொண்டிருக்கிறது. சக்கரவர்த்தி அலைவரிசைகள் 3 மாதத்திற்கு உங்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றால் அஸ்ட்ரோ உங்களுக்காக சூப்பர் பேக் 2-இன் சந்தாவில் RM15 வரை குறைத்து நீங்கள் சந்தாதாரர் ஆகும் சலுகையைத் தருகிறது.  தீபாவளிக்காக மட்டுமே ஏற்பாடுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக் கொண்டு உங்கள் தீபாவளியை மேலும் உற்சாகமாகக் கொண்டாடுங்கள்!