Home Featured கலையுலகம் ராஜ்தாக்ரேவுடன் சந்திப்பு – கமல் கிளப்பிய பரபரப்பு!

ராஜ்தாக்ரேவுடன் சந்திப்பு – கமல் கிளப்பிய பரபரப்பு!

472
0
SHARE
Ad

Kamal Haasan- Raj Thackeray(1)மும்பை – மகாரஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ்தாக்கரேவை நடிகர் கமல்ஹாசன் மும்பையில் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தது கமல்-ராஜ்தாக்ரே சந்திப்பு தான். எந்தவொரு அரசியல் சாயமும் இல்லாத கமல்ஹாசன், ராஜ்தாக்ரேவை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலின் போது கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் உடன் இருந்தார் என்று கூறப்படுகிறது.

மரியாதை ரீதியிலான சந்திப்பு என்றும், மும்பையில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு தொடர்பாக இருவரும் பேசியதாகவும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. எனினும், உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.