Home கலை உலகம் சென்னையில் சினிமா கொண்டாட்டம்

சென்னையில் சினிமா கொண்டாட்டம்

578
0
SHARE
Ad

100-yearsசென்னை, மார்ச்.13- இந்தியாவில் திரைப்படங்கள் உருவாக ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் சென்னையில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, போஜ்பூரி என, பலமொழிகளில் சினிமா தயாராகி வருகிறது என்றாலும் ஆரம்ப காலங்களில் அதிகப்படியான திரைப்படங்கள் சென்னை ஸ்டூடியோக்களில்தான் உருவாகின என்பதால் இந்த விழா சென்னையில் நடத்தப்படுகிறதாம்.

ஏப்ரலில் நடைபெறும் இந்த விழாவில் ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி மட்டுமின்றி, பாலிவுட்டில் இருந்து அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.