Home பொது தடுப்புக் காவலில் ரகு திடீர் மரணம்

தடுப்புக் காவலில் ரகு திடீர் மரணம்

659
0
SHARE
Ad

kulaஈப்போ, மார்ச்.13- கடந்த 4.3.2013 தேதி நடந்த கைகலப்பில் ஆடவர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக கம்பார் மாவட்ட காவல் நிலையத்தில் சரணடைந்த மாலிம் நாவாரைச் சேர்ந்த மு.ரகு எனும் ஆடவர் தடுப்புக் காவலில் திடீர் மரணமுற்ற காரணம் என்ன என்பதனை ரகுவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாலிம் நாவாரில் நடந்த தகராறு காரணத்தால் ஆடவர் ஒருவரின் தலையில் அடித்து காயப்படுத்தியதற்காகக் கடந்த 8.3.2013- ஆம் தேதி ரகுவிற்கு கம்பார் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் 8 மாதச் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

கம்பார் காவல் நிலையத்தில் வைக்கப்படிருந்த ரகு கடந்த  ஞாயிற்றுகிழமை காலை 8 மணியளவில் காவல் தடுப்பு அறையில் இறந்து கிடந்ததை கண்டு காவல் துறையினர் அவரை கம்பார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ரகுவை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார்.

#TamilSchoolmychoice

சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் ஈப்போ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனைடையே ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி செயலாளர் எஸ்.சிவராஜ், தடுப்புக்காவலில் மரணமுற்ற ரகுவின் மரணம் தொடர்பான முழு அறிக்கையை வெளியிட பேராக் காவல் நிலையத்தின் துணைத்தலைவர் டத்தோ அ.பரமசிவத்தை கேட்டுக் கொண்டார்.

ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இவரின் மரணம் தொடர்பில் சுயேச்சை விசாரணை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.