Home Featured நாடு “கெவின் சடலத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை” – சகோதரர் சார்லஸ் தகவல்!

“கெவின் சடலத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை” – சகோதரர் சார்லஸ் தகவல்!

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலம் இரகசியமாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக அவரின் இரு சகோதரர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சார்லஸ் சுரேஸ் (வயது 51) மற்றும் டேவிட் ரமேஷ் (51) ஆகிய இருவரும் மொராயிசின் சடலத்தில் இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கொண்டிருந்த வேளையில், அவரது இளைய சகோதரர் டத்தோ ரிச்சர்டு அச்சடலத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Kevin Morais 4

#TamilSchoolmychoice

கெவின் மொராயிசின் சடலம் தகனம் செய்யப்பட்டிருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கெவினின் உடலில் இரண்டாவது பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளும் படி தாங்கள் இருவரும் நீதிமன்றத்தில் மனு கொடுத்த அதே நாள், ரிச்சர்டு, அச்சடலத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“நான் ரிச்சர்டு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க யோசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்தினரின் நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டார்” என்று சார்லஸ் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், சார்ல்ஸ் நேற்று எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ரிச்சர்டுக்கும், கெவினுக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போது என்னவென்றால், கெவினுடன் மிகவும் நெருக்கமானவர் போல் ரிச்சர்டு காட்டிக் கொள்வதாகவும் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

புதிய ஆதாராங்கள் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற காரணத்தினால், கெவின் மொராயிசின் சடலம் அவசர அவசரமாக இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன்பே தகனம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சார்லஸ் சந்தேகிக்கின்றார்.

“எனது சகோதரர் கெவினின் கொலையை மூடி மறைக்கும் நோக்கத்துடன் சிலர் ரிச்சர்டை அனுகி ஒப்பந்தம் பேசியிருக்கலாம் என்று உறுதியாக நம்புகின்றேன்” என்றும் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரிச்சர்டு இந்த விவகாரம் குறித்து கருத்துரைக்க மறுத்திருக்கிறார். மாறாக, இறந்த தனது சகோதரர் கெவின் மொராயிசுக்குப் பதிலாக, நாளை பேராக் சுல்தானால் வழங்கப்படும் டத்தோ பட்டத்தைப் பெறப் போவதாக செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.