Home Featured தொழில் நுட்பம் இனி வாட்சாப்பில் குறுஞ்செய்திகளை ‘புக்மார்க்’ செய்து கொள்ளலாம்! 

இனி வாட்சாப்பில் குறுஞ்செய்திகளை ‘புக்மார்க்’ செய்து கொள்ளலாம்! 

736
0
SHARE
Ad

whatsapp-updateகோலாலம்பூர் – வாட்சாப்பில் மிக முக்கிய குறுஞ்செய்திகளை, எதிர்காலத் தேவைகளுக்காக ‘புக்மார்க்’ (bookmark) செய்ய முடியும். சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வாட்சாப் மேம்பாட்டில் (v 2.12.367) இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நமது அன்றாட இணைய செயல்பாடுகளில், உலாவியில் நமக்கு பிற்பாடு தேவைப்படும் பக்கங்களை புக்மார்க் செய்து கொள்வது வழக்கம். இந்த வசதி தான் தற்போது வாட்சாப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நண்பர்களுடனான அளவளாவலில் ஒரு குறிப்பிட்ட குறுஞ்செய்தியை மட்டும் நாம் புக்மார்க் செய்து கொள்ளலாம்.

Whatsapp-Starred-Messagesஎந்த செய்தியை நாம் புக்மார்க் செய்ய வேண்டுமோ, அதனை தேர்வு செய்து, ‘சேட்'(Chat) பட்டியில் உள்ள மெனுவை தேர்வு செய்தால்,  நட்சத்திர குறியீடு ஒன்று தோன்றும் அதனை கிளிக் செய்தால், நாம் விரும்பிய குறுஞ்செய்தி புக்மார்க் செய்யப்படும். ‘ஸ்டார்டு மெஸ்செஜஸ்’ (Starred Messages) என்று அழைக்கப்படும் இந்த வசதி இதுவரை ஐஒஎஸ் தளத்தில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.