கலிபோர்னியா: டெலிகிராம் எனப்படும் குறுஞ்செயலியின் பயன்பாடு 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 25 மில்லியன் புதிய பயனர்களை அது பதிவு செய்ததாக அதன் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டின் முதல் வாரத்தில் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டியது என்று அது தெரிவித்துள்ளது.
“கடந்த 72 மணி நேரத்தில் மொத்தம் 25 மில்லியன் பயனர்கள் டெலிகிராமில் சேர்ந்துள்ளனர். 38 விழுக்காடு பேர் ஆசியாவிலிருந்தும், 27 விழுக்காட்டினர் ஐரோப்பாவிலிருந்தும் , 21 விழுக்காட்டினர் லத்தீன் அமெரிக்காவிலிருந்தும் இணைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
பேஸ்புக் நிறுவனத்துடன் தனிப்பட்ட தரவைப் பகிர, புதிய தனியுரிமை விதிகளை ஒப்புக் கொள்ளாத பல பயனர்கள் கடந்த வாரம் வாட்சாப் செயலியிலிருந்து விடுபட கட்டாயப்படுத்தியது.
விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனர்கள் அச்செயலியைப் பயன்படுத்த முடியாது.