வாஷிங்டன் : உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டிருக்கும் குறுஞ்செயலி, வாட்ஸ்எப். பேஸ்புக் நிறுவனம்தான் இதன் உரிமையாளர்.
தொடர்ந்து பயனர்களை ஈர்க்க பல்வேறு புதிய அம்சங்களைத் தனது குறுஞ்செயலியில் அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ்எப்.
அடுத்த கட்டமாக, வாட்ஸ்எப் செயலியின் சில முக்கிய அம்சங்களை இனி பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான வண்ணங்களில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்தப் புதிய வசதி தற்போது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது இந்தப் புதிய வசதி அறிமுகம் காணும் என்பதை வாட்ஸ்எப் நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.