அண்மையில் டெலிகிராம் பயனர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து செல்லியல் இணைய ஊடகத்தின் செய்திகள் டெலிகிராம் குறுஞ்செயலியில் பகிரப்படும் வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
டெலிகிராம் குறுஞ்செயலியைத் தங்களின் திறன்பேசிகளில் ((ஸ்மார்ட்போன்) பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருபவர்கள் இந்த சேவையின் வழி செல்லியல் செய்திகளை நேரடியாக டெலிகிராம் குறுஞ்செயலித் தளத்திலேயே உடனுக்குடன் பெற்று படித்துக் கொள்ளலாம்.
கீழ்க்காணும் இணைப்பின் மூலம் செல்லியல் வாசகர்கள் நேரடியாக டெலிகிராம் குறுஞ்செயலியின் செல்லியல் தளத்தில் இணைந்து கொள்ளலாம் :
https://t.me/selliyal
அண்மையக் காலங்களில் டெலிகிராம் குறுஞ்செயலியைப் பயன்படுத்தும் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயனர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வாட்ஸ்அப் குறுஞ்செயலிக்குப் போட்டியாக அனைத்துலக அளவில் உருவெடுத்துள்ளது டெலிகிராம். இதனை வாட்ஸ்அப் போன்றே கைப்பேசிகளில் மட்டுமின்றி மேசைக் கணினிகளிலும் பயனர்கள் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள் இனி பேஸ்புக் தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற நடைமுறையை பேஸ்புக் அறிவித்ததைத் தொடர்ந்து பல பயனர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட டெலிகிராம் செயலிக்கு மாறினர்.
அந்த சமயத்தில் 3 நாட்களிலேயே 25 மில்லியன் புதிய பயனர்கள் டெலிகிராமில் இணைந்ததாக டெலிகிராம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.